உலகளவில் அக்டோபர் மாதம், நீண்ட காலமாக பாஸ்டர் பாராட்டு (Pastor Appreciation) மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமது தேவாலயத் தலைவர்களின் பங்களிப்புகளை கவுரவிப்பதற்கான அழைப்பை புனித பவுல் வரை காணலாம். முதல் கிறிஸ்தவ திருச்சபை நிறுவப்பட்ட காலத்தில் சபையின் விவகாரங்களை, நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும் என்று புனித பவுல் சபைக்கு அறிவுறுத்தினார் (1 தீமோத்தேயு 5:17 ). புனித பவுல் கிறிஸ்தவ சமூகங்களை.... அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். (1 தெசலோனிக்கேயர் 5 : 12-13). என்றும் அறிவுறுத்தினார். நமது தமிழ் நாட்டில் 2019 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள POT- தி பெந்தேகோஸ்தல்ஸ் ஆஃப் திருச்சி என்கிற அமைப்பு பாஸ்டர் பாராட்டு மாதத்தை தேசிய அனுசரிப்பு மாதமாக ஊக்குவிக்க...